தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதே ஜார்ஜ் கோட்டைதான்; ஆனால் இது வேற மாதிரி! - தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்ட அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை புனித ஜார்ஜ் கோட்டையில் ஜனவரி 5ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதாகப் பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

பேரவை
பேரவை

By

Published : Dec 13, 2021, 3:10 PM IST

சென்னை:புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை அரங்கில் பேரவைக் கூட்டம் வரும் ஜனவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளரிடம் பேசிய அப்பாவு,

"கலைவாணர் அரங்கில் குறிப்பிட்ட இடைவெளியோடு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. நாள்தோறும் குறைந்த அளவே கரோனா தொற்று ஏற்பட்டுவருகிறது. தலைமைச் செயலகம் உள்ள சட்டப்பேரவையில் கூட்டத்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல்மயமாகும் ஜார்ஜ் கோட்டை

ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டம் ஜனவரி 5ஆம் தேதி நடைபெறும். தொடுதிரை கணினி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு முன்பாக இருக்கும் என்பதுடன், இப்பேரவை தாளில்லா (Paperless) சட்டப்பேரவையாக இருக்கும்.

சபாநாயகர் அப்பாவு

சட்டப்பேரவைக் கூட்டம் நேரலை செய்யப்படுவது கவனத்தில் உள்ளது. அலுவல் ஆய்வுக்குழு கூடி பார்வையாளர்கள் வருகை குறித்து முடிவுசெய்யும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஸ்டாலின் ஆலோசனை: புதிய கட்டுப்பாடுகளுக்கு வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details