சென்னை: அதிமுக கட்சியிலிருந்து தோப்பு வெங்கடாச்சலம் நீக்கப்பட்டார்.
அதிமுகவிலிருந்து தோப்பு வெங்கடாச்சலம் நீக்கம்! - தோப்பு வெங்கடாச்சலம்
அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்த தோப்பு வெங்கடாச்சலத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கி தலைமை கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், “கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் பெருந்துறை சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள காரணத்தாலும் ஈரோடு புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தோப்பு வெங்கடாச்சலம் இன்று (மார்ச் 19) முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.