சென்னை: தமிழ்நாடு சட்ட பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரன், அதிமுக ஆட்சியில் மெரினா கடற்கரையிலிருந்த கண்ணகி சிலை காரணமில்லாமல் அகற்றப்பட்டதாக தெரிவித்தார்.
இதற்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். பின்னர் பேசிய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் செங்கோட்டையன், ”கண்ணகி சிலையை உடைத்து தள்ளிய அதிமுக என உறுப்பினர் பேசியதாகவும் அதனை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் எனவும் கூறினார்.
இதற்கு பதிலளித்த பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு, ”சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரன் எந்த ஒரு தனிப்பட்ட இயக்கத்தையோ , தனிப்பட்ட நபரையோ குறிப்பிட்டு பேசாமல் பொதுவான கருத்தையே முன்வைத்தார், எனவே அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டிய அவசியமில்லை” என்றார்.