தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேர்தல் விதி மீறல்: பல்வேறு கட்சியினர் மீது வழக்கு!

சென்னை: பல்வேறு இடங்களில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி போஸ்டர் ஒட்டியதாகக் கூறி, பல்வேறு கட்சி நிர்வாகிகள் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேர்தல் விதி மீறல்
தேர்தல் விதி மீறல்

By

Published : Mar 4, 2021, 12:33 PM IST

வில்லிவாக்கம் அகத்தியர் நகரில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி மதிமுக போஸ்டர் ஒட்டி இருந்ததால் மதிமுக வில்லிவாக்கம் பகுதி செயலாளர் பிரபாகரன் மீது வில்லிவாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதே போல், அரும்பாக்கம் ஜானகிராமன் காலனி கனரா வங்கி அருகே மின்சார பெட்டியில் திமுக கட்சி போஸ்டர் ஒட்டியதாக கேகே நகர் வட்ட செயலாளர் கோவிந்தராஜன் மீது அரும்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், அமைந்தகரை திருவீதியம்மன் கோவில் தெரு அருகே மக்கள் நீதி மய்யம் கட்சி போஸ்டரை ஒட்டியதாக மக்கள் நீதி மய்யம் கட்சி மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதே போல் கொளத்தூர், அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி போஸ்டர் ஒட்டியதாக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுவரை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 106 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க...ஸ்டாலினை கண்டித்து போஸ்டர் ஒட்டிய அதிமுக - திமுக நிர்வாகிகள் கொந்தளிப்பு

ABOUT THE AUTHOR

...view details