சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணலை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு உள்ளிட்டோர் செய்துவருகின்றனர்.
திமுகவின் விருப்ப மனு கடந்த 17ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் எட்டாயிரத்து 388 விருப்ப மனுக்கள் விநியோகம்செய்யப்பட்டன. இதில் ஏழாயிரத்து 967 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
சுமார் ஏழாயிரம் பேர் நேர்காணலுக்குத் தேர்வுசெய்யப்பட்டு இன்று (மார்ச் 2) மட்டும் சுமார் 1,400 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இன்று தொடங்கி அதிகபட்சமாக ஏழு நாள்கள் வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.