தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேர்தல் 2021: வாக்குப்பதிவில் கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள்! - சத்யபிரத சாகு

தமிழ்நாடு தேர்தல் வாக்குப்பதிவு விழுக்காட்டின் கவனிக்க வேண்டிய சில அம்சங்களைக் காணலாம்.

தேர்தல் 2021
தேர்தல் 2021

By

Published : Apr 7, 2021, 2:13 PM IST

Updated : Apr 8, 2021, 5:57 AM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 72.78 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக பாலக்கோட்டில் 87.33 விழுக்காடு வாக்குகளும், குறைந்தபட்சமாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன. இதுபோக மேலும் சில விஷயங்களைக் காணலாம்.

அதிகபட்ச வாக்குப்பதிவு - முதல் 5 மாவட்டங்கள்

  1. கரூர் - 83.92
  2. அரியலூர் - 82.47
  3. தர்மபுரி - 82.35
  4. கள்ளக்குறிச்சி - 80.14
  5. நாமக்கல் - 79.72

குறைந்தபட்ச வாக்குப்பதிவு - முதல் 5 மாவட்டங்கள்

  1. சென்னை - 59.06
  2. திருநெல்வேலி - 66.65
  3. செங்கல்பட்டு - 68.18
  4. கன்னியாகுமரி - 68.67
  5. கோயம்புத்தூர் - 68.7

80 விழுக்காட்டிற்கு அதிகமாக வாக்குப்பதிவான தொகுதிகள் விவரம்:

  1. பாலக்கோடு - 87.33
  2. குளித்தலை - 86.15
  3. வீரபாண்டி - 85.53
  4. எடப்பாடி - 85.6
  5. விராலிமலை - 85.43
  6. மதுராந்தகம் - 80.91
  7. உத்திரமேரூர் - 80.09
  8. சோளிங்கர் - 80.01
  9. ஜோலார்பேட்டை - 80.92
  10. வேப்பனஹள்ளி - 81.3
  11. பென்னாகரம் - 84.19
  12. பாப்பிரெட்டிபட்டி - 82.04
  13. செங்கம் - 80.67
  14. செய்யூர் - 81.67
  15. விக்கிரவாண்டி - 81.48
  16. உளுந்தூர்பேட்டை - 82.62
  17. ரிஷிவந்தியம் - 80.18
  18. ஏற்காடு - 83.14
  19. ஓமலூர் - 83.33
  20. சங்ககிரி - 83.71
  21. ராசிபுரம் - 82.19
  22. பரமத்திவேலூர் - 81.13
  23. பெருந்துறை - 82.5
  24. பவானி - 83.7
  25. கோபிசெட்டிபாளையம் - 82.51
  26. ஒட்டன்சத்திரம் - 85.09
  27. வேடசந்தூர் - 80.23
  28. அரவக்குறிச்சி - 81.9
  29. கரூர் - 83.5
  30. கிருஷ்ணராயபுரம் - 84.14
  31. குன்னம் - 80.06
  32. அரியலூர் - 84.58
  33. ஜெயங்கொண்டம் - 80.35
  34. குறிஞ்சிப்பாடி - 81.25
  35. கீழ்வேலூர் - 80.1
  36. வேதாரண்யம் - 80.6
  37. நன்னிலம் - 82

குறைவாக வாக்குப்பதிவான 5 தொகுதிகள்

  1. வில்லிவாக்கம் - 55.52
  2. தி.நகர் - 55.92
  3. வேளச்சேரி - 55.95
  4. மயிலாப்பூர் - 56.59
  5. அண்ணாநகர்- 57.02

தலைவர்கள் - தொகுதி - வாக்குப்பதிவு விழுக்காடு

  • முதலமைச்சர் பழனிசாமி - எடப்பாடி - 85.6
  • அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் - போடிநாயக்கனூர் - 73.65
  • திமுக தலைவர் ஸ்டாலின் - கொளத்தூர் - 60.52
  • அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் - கோவில்பட்டி - 67.43
  • நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - திருவொற்றியூர் - 65
  • மநீம தலைவர் கமல் ஹாசன் - கோவை தெற்கு - 60.72
  • தேமுதிக பொருளாளர் பிரேமலதா - விருத்தாசலம் - 76.98
Last Updated : Apr 8, 2021, 5:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details