தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சட்டப்பேரவை தேர்தல்: மார்ச் 6, 7 காங்கிரஸின் நேர்காணல்! - கேஎஸ் அழகிரி செய்திகள்

காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் மார்ச் 6, 7ஆம் தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Congress candidate interview news
Congress candidate interview news

By

Published : Mar 2, 2021, 12:12 PM IST

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, “நடைபெறவுள்ள 2021 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ் தோழர்களிடமிருந்து பிப்ரவரி 25 முதல் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

விருப்ப மனு அளிக்க இறுதி நாள் மார்ச் 5ம் தேதி ஆகும். தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த அனைவரிடமும் மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நேர்காணல் நடைபெறவுள்ளது.

விருப்ப மனுவினை சமர்ப்பித்துள்ள காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் நடைபெறும் நேர்காணலில் அவசியம் பங்கேற்கவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...ஸ்டாலினை எதிர்த்துக் களம்காணும் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்?

ABOUT THE AUTHOR

...view details