இதுகுறித்து பேரவைச் செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் புறக்கணித்தனர்.
ஆளுநர் பன்வாரிலால் அறிவிப்பு தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவையின் 10ஆவது கூட்டத்தொடரை முடித்து வைப்பதாக ஆளுநர் பன்வாரிலால் அறிவித்துள்ளார். மேலும் பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இட ஒதுக்கீடு தொடரும் - உச்ச நீதிமன்றம் கேள்வி