தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குடியுரிமை சட்ட மசோதா நகலை தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டம்! சென்னையில் பரபரப்பு - சென்னை குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்த்து ஆர்பாட்டம்

சென்னை: மத்திய அரசின் புதிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து திராவிட இயக்க தமிழர் பேரவை தலைமையில், அம்மசோதாவின் நகலை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

protest against cab in chennai
political leaders against cab

By

Published : Dec 13, 2019, 1:25 PM IST

மத்திய அரசின் புதிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து திராவிட இயக்க தமிழர் பேரவை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா சாலையின் தர்கா அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி, கருணாஸ், இயக்குநர் கெளதமன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை சட்ட மசோதா நகலைக் கிழித்து எரித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப. வீரபாண்டியன் கூறுகையில், ஒருவருக்கொருவர் பகை ஏற்படுத்தும் விதமாக ஒரு புதிய சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் அமைப்பு சட்டத்தை ஆர்எஸ்எஸ் அறிக்கையாக மாற்ற இன்றைய பாஜக அரசு முயற்சி செய்து வருவதாகக் குற்றஞ்சாட்டினார்.

தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பேசுகையில், இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இந்திய இறையாண்மைக்கும், சகோதரத்துவத்துக்கும், சமத்துவத்திற்கும் எதிரான ஒரு சட்டமாகும். அது போன்று ஈழ தமிழர்கள், இஸ்லாமியர்கள் இணைக்கப்படாதது; அவர்களை அவமானப்படுத்தும் செயலாகும். இதனை மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தெரிவித்தார்.

குடியுரிமை திருத்த மசோதா: அசாமில் வெடித்த போராட்டம்!

தொடர்ந்து பேசிய கொளதமன், இச்சட்டம் திரும்பப் பெறவில்லை என்றால் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் இந்தியா முழுவதும் மாபெரும் போராட்டம் வெடிக்கும் எனறு கூறினார். மேலும் தமிமுன் அன்சாரி பேசுகையில், ஈழத்தமிழர்கள், இஸ்லாமியர்கள் புறக்கணித்து இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்பதே எங்கள் ஒரே கோரிக்கை என தெரிவித்தார்.

குடியுரிமை சட்ட மசோதா நகலை தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details