தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நாளை 10,11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை - தமிழ்நாடு பொதுத்தேர்வு அட்டவணை 2022

தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

tn-10th-11th-and-12th-public-exam-time-table-2022
tn-10th-11th-and-12th-public-exam-time-table-2022

By

Published : Feb 28, 2022, 4:11 PM IST

சென்னை:நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்படி தமிழ்நாட்டில் செப்.1ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து நவம்பர் 1ஆம் தேதி முதல், 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

இதனிடையே மீண்டும் கரோனா தொற்று பரவல் ஏற்பட்டு, ஜனவரி மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிகள் முழுவதுமாக செயல்பட்டுவருகின்றன. முன்னதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் கண்டிப்பாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே பள்ளி மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடந்துமுடிந்தன. இந்த நிலையில், 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை(மார்ச்.1) வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க:10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு!

ABOUT THE AUTHOR

...view details