சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடியுடனான இரண்டு நாள் சந்திப்புக்காகச் சென்னை வந்திருந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பிரதமர் மோடியுடன் மாமல்லபுர சிற்பங்களை சுற்றிப் பார்த்த சீன அதிபர், பின்னர் கடற்கரை கோயில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடன நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தார்.
கலைகளில் இன்னும் பாகுபாடுகள் வேரூன்றியுள்ளது - டி.எம் கிருஷ்ணா வேதனை! - டிஎம் கிருஷ்ணா ட்வீட்
பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பின்போது நடைபெற்ற கலைகளில் வேறுபாடு தெரிந்ததாக பிரபல பின்னணி பாடகர் வேதனை தெரிவித்துள்ளார்.
![கலைகளில் இன்னும் பாகுபாடுகள் வேரூன்றியுள்ளது - டி.எம் கிருஷ்ணா வேதனை!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4737374-thumbnail-3x2-df.jpg)
TM Krishna
இதுகுறித்து பிரபல பின்னணி பாடகர் டி.எம் கிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பின் வீடியோக்களை பார்க்கும்போது நாம் கலைகளில் இன்னும் பாகுபாடுகளை காட்டுகிறோம் என்பது தெளிவாகத் தெரிகிறது. பரதநாட்டியத்தைக் கடற்கரை கோயிலில் ஏற்பாடு செய்திருந்தவர்கள் நாட்டுப்புற நடனங்களை விமானநிலையத்தில் ஏற்பாடு செய்துள்ளனர்" என்று ட்வீட் செய்திருந்தார்.
இதையும் படிக்கலாமே: மாமல்லபுரமும் இரு நாட்டுத் தலைவர்களும் - புகைப்படத்தொகுப்பு 1