தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

டி.கே.ரங்கராஜனின் நாடாளுமன்ற உரைகள் தொகுப்பு நூல் வெளியீடு! - 44th chennai book fair

டி.கே.ரங்கராஜனின் நாடாளுமன்ற உரைகள் தொகுக்கப்பட்ட நூல் வெளியீட்டு நிகழ்வு 44ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி விழாவில் நடந்தது.

TK Rangarajan Parliamentary Speeches Collection Book
TK Rangarajan Parliamentary Speeches Collection Book

By

Published : Feb 28, 2021, 10:01 PM IST

சென்னை: டி.கே.ரங்கராஜனின் நாடாளுமன்ற உரைகள் தொகுப்பு அடங்கிய நூலினை சிபிஐ (எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் வெளியிட்டார்.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வரும் 44ஆவது புத்தக கண்காட்சியில் டி.கே.ரங்கராஜனின் நாடாளுமன்ற உரைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. இந்த நூலினை சிபிஐ (எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் வெளியிட, திமுக மாநிலங்களவை தலைவர் திருச்சி சிவா அதனைப் பெற்றுக்கொண்டார்.

இதில் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா, சிபிஐ (எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிஐடியு தலைவர் செளந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன் பேசுகையில், “நாடாளுமன்ற உரைகளை தொகுப்பது என்பது முதலில் மிகப்பெரிய பணி. நாடாளுமன்றத்திலேயே பேசுவது என்பது ஒரு பெரிய பணி. நாடாளுமன்றத்தில் மக்களுக்கு எதிரான மசோதா வந்தால் அதற்கு டி.கே.ரங்கராஜனின் எதிர்ப்பு முக்கியமானதாக இருக்கும். தொடர்ந்து மத்திய அரசு அனைத்து துறையையும் தனியார்மயமாக்கி வருகிறது. இணைந்து போராடி எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டிய தருணத்தில் டி.கே.ஆர் போன்றவர்கள் இல்லாதது பெரிய இழப்பு” என்றார்.

தொடர்ந்து பேசிய கே.பாலகிருஷ்ணன், என்னை பொறுத்தவரை நாடாளுமன்றத்தில் உரையாற்றியதை விட தமிழ்நாட்டு தொழிலாளர்களின் உரிமை போராட்டத்திற்கு இவராற்றிய பங்கு அளப்பரியது என்று கூறினார்.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவா பேசும்போது, “நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது கடினம் என்றார்கள் உண்மைதான். அனைத்தையும் விட பெரிய கடினம் கம்யூனிஸ்ட் ஆக இருப்பது. பெரியார், அண்ணா, கலைஞர் என்ற தலைவர்கள் எங்களுக்குள் ஊடுருவி விட்டார்கள். இல்லையென்றால் நானும் கம்யூனிஸ்ட் ஆக இருந்திருப்பேன். டி.கே.ஆர் நாடாளுமன்றத்தில் பேச எழுந்தவுடன் அவரது பேச்சு அனைத்து கட்சியினரையும் வியக்க வைக்கும்.

நாடாளுமன்றத்தில் நடைமுறைகள் எழுத்து வடிவத்தில் உள்ளது. ஆனால் எங்களது உரிமைகள் என்பது முழுமையாக இல்லை. நாடாளுமன்றம் இருக்கிறது, ஆனால் அது தலைகீழாக இருக்கிறது. அண்மை காலங்களில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் அனைத்தும் எதிர்க்கட்சியின் ஒப்புதல் இல்லாமலே நிறைவேற்றப்பட்டுள்ளது. கம்யூனிச நூல்களை படிக்கும் பொழுது சற்று கரடு முரடாக இருக்கும். ஆனால் இந்த நூலின் மொழிபெயர்ப்பு மிக எளிமையாக உள்ளது” என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய பிரகாஷ் காரத், “டி.கே.ரங்கராஜன் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர். தொழிலாளர்களுக்காக குரல் கொடுப்பவர்களில் முதலாவதாக இருப்பார். டி.கே.ஆர் நாடாளுமன்ற வாதங்கள், அவருடைய தனிப்பட்ட திறன்கள் இப்புத்தகத்தில் உள்ளன” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details