தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நம்ம தமிழ்நாடு : தமிழ் மொழியில் கெத்து காட்டும் டைட்டன் நிறுவனம்! - tamil watch launched by titan

மக்களின் முதன்மையாக இருக்கும் வாட்ச்சுகளில் டைட்டன் நிறுவனம் தமிழ்மொழியை புகுத்தி புது டிரெண்ட் செட்டை உருவாக்க முயற்சி செய்துள்ளது.

titan namma tamil watch

By

Published : Nov 17, 2019, 3:57 AM IST

டைட்டன் வாட்ச் நிறுவனம் புதுமைகளை அளிப்பதில் தனித்துவமானது. அதோடு மிடில் கிளாஸ் தொடங்கி மேல்தட்டு வரை அனைவருக்குமான கலெக்‌ஷன்களும் டைட்டனில் உண்டு. இப்படி மக்களின் முதன்மையாக இருக்கும் டைட்டன் நிறுவனம் தற்போது தமிழ் மொழியின் மூலம் புது டிரெண்ட் செட்டை உருவாக்க முயற்சி செய்துள்ளது.

’டைட்டன் தமிழ்நாடு’ என்ற பெயரில் தமிழ் மொழி மற்றும் தமிழ் கலைகளைப் போற்றும் விதமாக வாட்ச் தொகுப்பை அறிமுகம் செய்துள்ளது. அதாவது டைட்டன் தன்னுடைய வாட்சுகளில் தமிழ் மொழியை பதித்துள்ளது. ஒன்று, இரண்டு மூன்று எனத் தமிழில் அதில் எழுதப்பட்டுள்ளது.

அதோடு உள் வடிவமைப்பில் தமிழ்நாட்டுக் கோயில் தூண்கள், யாழி, கோபுரங்களைப் பொறித்துள்ளது. அவற்றிற்கு 'நம்ம தமிழ்நாடு வாட்ச்' என்றும் பெண்களுக்கான வாட்சுகளில் காஞ்சிபுரம் புடவைகளில் பதிக்கப்படும் மயில் டிசைனை உள்ளே பதித்து அதைக் 'காஞ்சிபுரம் வாட்ச்' என்று அறிமுகப்படுத்தியுள்ளது.

டைட்டனின் இணையதளத்தில் இந்த தமிழ்வகை வாட்ச்சுகள் குறித்து குறிப்பிட்டுள்ளது. அதில் “உலகிலேயே கலாச்சாரம் நிறைந்த பழமையான மொழி தமிழ். அதன் கட்டிடக் கலைகளும் அதன் பிரமாண்டத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. காஞ்சிபுரம் பட்டு தூய மல்பரி சில்க் நூலால் நெய்யப்பட்டு அதன் பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது. இப்படி ஒட்டுமொத்த பாரம்பரியத்தையும் அடக்கிய தமிழ்நாடு எங்களை வெகுவாகக் கவர்ந்ததாலேயே இந்த தொகுப்பை அறிமுகம் செய்துள்ளோம்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details