இது தொடர்பாக தென்னக ரயில்வே இன்று (நவம்பர் 26) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இன்று (26-11-2020) மாலை 5:10 மணிக்கு தாம்பரத்தில் இருந்து ஹைதராபாத் செல்லும் பண்டிகைகால சிறப்பு ரயில் (எண்: 02759) மற்றும் இன்று (22-11-20) 6:30 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில் (எண்: 02760) நிவர் புயல் காரணமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த அறிவிப்பின் மூலம் இந்த இரண்டு ரயில்களும் (02759 & 02670) அட்டவணை படி வழக்கம் போல் இன்று (26-11-2020) இயங்கும்.
நிவர் புயல் எதிரொலி - சென்னை வரும் ரயில்களின் நேரம் மாற்றியமைப்பு - நிவர் புயல் எதிரொலி
சென்னை: நிவர் புயல் எதிரொலியாக ஹைதராபாத், ஆலப்புழா, மங்களூரு ஆகிய இடங்களில் இருந்து சென்னை வரும் ரயில்களின் அட்டவணையை மாற்றியமைத்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும், இன்று (26.11.2020) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மங்களூரு செல்லும் வண்டி எண் 02601, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆலப்புழா செல்லும் வண்டி எண் 02639 ஆகிய இரண்டு சிறப்பு விரைவு ரயில்களும் வழக்கமான நேரத்தில் இயக்கப்படும்.
ஈரோடு ரயில் நிலையம் வரை பகுதியாக இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட (ஆலப்புழா - சென்னை சென்ட்ரல் சிறப்பு விரைவு ரயில்) வண்டி எண் 02640, ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் வரை அட்டவணை நேரப்படி முழுவதாக இயக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.