அம்பேத்கர் மணிமண்டபம் அருகே காதலர் தின கொண்டாட்டத்திற்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலை நிகழ்ச்சிகள், ஆடல் பாடல் என அனைத்து விதமான கலை நிகழ்ச்சிகளுக்கும் விழாக்குழுவினர் தயாராக இருந்தனர். ஆனால், காவல்துறை திடீரென இந்த நிகழ்வுக்கு அனுமதி மறுத்தது.
சிஏஏவிற்கு எதிராக போராடிய மூன்று பெண்கள் கைது! - பெண்கள் கைது
சென்னை: ராஜா அண்ணாமலைபுரத்தில் முதல்வர் செல்லும் பாதையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய 3 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து ராஜா அண்ணாமலைபுரத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் காய்த்ரி கந்தாடை உள்பட 3 பெண்கள் அனுமதி மறுத்த காவல்துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டனர். முதலமைச்சர் செல்லும் வழி என்பதால் அங்கு போராட்டம் நடத்திய சமூக செயற்பாட்டாளர் காய்த்ரி கந்தாடை, ராதிகா, பிரியங்கா ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: காதலர் தினம் : கோவை பெரியார் படிப்பகத்தில் உற்சாக கொண்டாட்டம்