சென்னை: மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரியின் மைதானம் அருகே ஆகஸ்ட் 2ஆம் தேதியில் அடையாளம் தெரியாத நபர் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இச்சம்பவம் குறித்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தவர் யார்? என்பது தொடர்பாக காவலர்கள் நடத்திய விசாரணையில், மயிலாப்பூர் டுமில் குப்பம் பகுதியைச் சேர்ந்த பூபாலன் (27) என்பதும், இவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரியவந்தது.
சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டுவந்த 3 பேர் சம்பவத்தின் தகவல்கள்
ஆகஸ்ட் 2ஆம் தேதி இரவு பூபாலனுக்கு போன் வந்துள்ளது. வெளியே சென்ற அவர், மாநிலக் கல்லூரி பின்புறத்தின் முட்புதரில் நண்பர்களுடன் மது அருந்தியதாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை நடந்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேமடைந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று பேர், திருச்சி நீதிமன்றத்தில் நேற்று (ஆக. 07) சரணடைந்தனர். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சேசுராஜ் (29), பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாந்த் (28), திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சரத்குமார் (28) ஆகியோர் இன்று காலை திருச்சி ஜெஎம்-1 நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
தகவலறிந்து அண்ணா சதுக்கம் காவலர்கள் திருச்சி விரைந்துள்ளது. சரணடைந்த மூன்று பேரையும் காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: 'குண்டாஸ் உத்தரவை ரத்து செய்யக் கோரி 'பப்ஜி' மதன் மனு'