ஆந்திராவிலிருந்து அதிகளவில் குட்கா, பான் மசாலா பொருள்கள் கடத்திவரப்பட்டு துரைப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டுவருவதாக அடையாறு காவல் துணைஆணையர் அலுவலகத்திற்குத் தகவல் கிடைத்தது.
அதனால் தனிப்படை காவல் துறையினர் துரைப்பாக்கம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சாலையோரம் நின்றிருந்த 2 மினி வேனைகளைச் சோதனையிட்டனர். அந்தச் சோதனையில், 3 டன் குட்கா, பான் மசாலா உள்ளிட்டவை சிக்கின.