தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கஞ்சா வியாபாரிகள் மூன்று பேர் கைது! - cannabis sellers arrested

சென்னை: செங்குன்றத்தில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்ளிட்ட மூன்று பேரை காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கஞ்சா வியாபாரிகள்

By

Published : Nov 10, 2019, 8:10 PM IST

Updated : Nov 12, 2019, 11:54 AM IST

சென்னை செங்குன்றம் பேருந்து நிலையத்தில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையிலிருந்த இளைஞர்கள் இருவரிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்துள்ளனர்.

கஞ்சா வியாபாரிகள் மூன்று பேர் கைது

அவர்களைப் பிடித்துக் காவல் நிலையம் கொண்டுவந்து சோதனை செய்தபோது, இருவரிடமும் 15 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. மேற்கொண்டு அவர்களிடம் நடத்திய விசாரணையில் மாதவரத்தில் ரம்யா என்பவர் தங்களுக்குக் கஞ்சா விநியோகம் செய்ததாகக் கூறியதன் பேரில், ரம்யாவின் வீட்டிற்குச் சென்று காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் வழிபாட்டிற்காக திறப்பு!

அப்போது அங்கு 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து செங்குன்றம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Last Updated : Nov 12, 2019, 11:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details