சென்னை:துபாயிலிருந்து 400 கிராம் தங்கத்தக் கடத்தி வந்த குருவியே (கடத்தல்காரர்) அதனைக் கடத்தத் திட்டமிட்ட நிலையில், போலீசார் ஒருவரின் உதவியுடன் குருவியிடமிருந்து குருவியின் சகோதரகளே கடத்திய சம்பவம் அரும்பாக்கம் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ரூ.10 லட்சத்தைக் கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து மூவரை இன்று (செப்.12) கைது செய்துள்ளனர்.
மைக்ரோ ஓவனில் தங்கம் கடத்தல்:துபாயிலிருந்து கடந்த 7ஆம் தேதி, சென்னைக்கு திருத்தணியைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் விமானத்தில் 400 கிராம் தங்கத்தைக் கடத்தி வந்தார். துபாயைச் சேர்ந்த ஹஸன் பாஷா என்பரிடமிருந்து இதை அவர் பெற்று விமான நிலையத்தில் இருந்த பல கெடு பிடிகளைத் தாண்டி அவர் மைக்ரோ ஓவனில் மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளார்.
கடத்தல் தங்கத்தை கடத்த எண்ணிய குருவி: பின்னர் சென்னை வந்ததும் தனது உறவினர்களான ஷாம், மைக்கேல் ராஜ் மற்றும் அவர்களது நண்பர்களுடன் ஒன்றாக செல்லும் வழியில் ஆனந்தராஜூக்கு, நாமும் இன்னமும் எத்தனை நாட்கள் தான் இப்படி உயிரைப் பணயம் வைத்து குருவியாக வேலை செய்வது என்று எண்ணியுள்ளார். தொடர்ந்து அவர், தனது தம்பிகளுடன் கடத்தி வந்த 400 கிராம் தங்கத்தை தானே கொள்ளை அடிக்க திட்டமிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, அவரும் அவரது தம்பிகள் நால்வரும் இணைந்து விமானநிலையத்திலிருந்து அடையாருக்கு சென்று பிரபல தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கி, கையோடு கொண்டு சென்ற மைக்ரோ ஓவனைத் திறக்க முயன்றபோது அதில் தங்கம் இல்லாததைக் கண்டு ஏமாற்றமடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் வீடு திரும்பினர்.
காரைக்காலில் காத்திருந்த கும்பல் கைவரிசை: இதனிடையே தங்கம் எப்போது கைக்கு வரும் என காரைக்காலில் காத்திருந்த கும்பல் ஒன்று, தங்கம் இன்னும் வரவில்லை என துபாயிலிருந்த ஹஸன் பாஷாவிற்கு தகவல் அளிக்கவே, ஆனந்தராஜின் பாஸ்போர்ட் உள்ளிட்ட விவரங்களை ஹஸன் அவர்களுக்கு அனுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து மறுநாள் காலை ஆனந்தராஜ் வீட்டிற்கு காலை 6 மணி அளவில் காரைக்காலை சேர்ந்த இதயத்துல்லா, பாலகன், ஆற்காட்டை சேர்ந்த திமுக நகர துணை செயலாளர் ரவிக்குமார், தினேஷ், நவீன் குமார் ஆகியோர் பிஎம்டபிள்யூ காரில் சென்று ஆனந்தராஜ் மற்றும் அவருடைய தம்பிகள் உட்பட ஐந்து பேரை காரில் கடத்தி சென்னைக்கு கொண்டு வந்துள்ளனர்.
தங்கம் எங்கே போனது? இதனைத் தொடர்ந்து, மறுநாள் காலை ஆனந்தராஜின் வீட்டிற்கு காலை 6 மணியளவில் பிம்டபிள்யூ காரில் சென்ற காரைக்காலைச் சேர்ந்த இதயத்துல்லா, பாலகன், ஆற்காடைச் சேர்ந்த திமுக நகர துணை செயலாளர் ரவிக்குமார், தினேஷ், நவீன் குமார் ஆகியோர் ஆனந்தராஜூவையும் அவரது சகோதரர்கள் ஐவரையும் காரில் கடத்தினர். கடத்தியதோடு, அரும்பாக்கத்தில் பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்க வைத்து அவர்களிடன் 400 கிராம் தங்கம் எங்கே? எனக் கேட்டு அடித்து துன்புறுத்தினர். தான் மைக்ரோ ஓவனைத் திறந்து பார்த்தபோது, அதில் தங்கம் காணாமல்போனதை அவர்களிடம் தெரிவித்தும் அவர்கள் விட்டபாடில்லை. தங்கத்தை எடுத்து வைத்துக்கொண்டு எங்களிடமா ஆட்டம் காட்டுகிறாய் எனக் கூறி மீண்டும் தாக்கியுள்ளனர்.
அரும்பாக்கம் போலீசாரின் விசாரணை: ஏதோ தவறு நடப்பதாக சுதாரித்த ஹோட்டலில் தங்கியிருந்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, அரும்பாக்கம் போலீசார் உடனடியாக அங்கிருந்தவர்களை குண்டுக்கட்டாக கைது செய்து விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றனர். ஆனந்தராஜ் அளித்த புகாரின் அடிப்படையில், இதயத்துல்லா, பாலகன் ரவிக்குமார், தினேஷ் உட்பட ஐந்து பேரையும் அரும்பாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.