சென்னை கொளத்தூர் மதுரை சாமி மடம் மெயின் தெருவில் உள்ள ஆனந்தன் என்பவரது மொட்டை மாடியிலிருந்த மூன்று குடிசை வீடுகள் ராக்கெட் பட்டாசு விழுந்ததில் தீ பிடித்து எரிந்தது. அதனால், ஆனந்தன் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தார்.
ராக்கெட் பட்டாசால் விபரீதம்: 3 குடிசை வீடுகள் தீ பிடித்து நாசம்! - three huts caught fire
சென்னை: கொளத்தூரில் ராக்கெட் பட்டாசால், மூன்று குடிசை வீடுகள் தீ பிடித்ததில் பணம், வீட்டு உபயோக பொருள்கள் எரிந்து நாசமாகின.
![ராக்கெட் பட்டாசால் விபரீதம்: 3 குடிசை வீடுகள் தீ பிடித்து நாசம்! in chennai](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9543949-521-9543949-1605348123715.jpg)
in chennai
அந்தத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த செம்பியம், வியாசர்பாடி தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடிசையில் இருந்தவர்களின் 10 சவரன் நகை, ரூ.15 ஆயிரம் பணம், வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து நாசமாகின.
இதையும் படிங்க:ராய்காட் தனியார் ஆலையில் பயங்கர தீ விபத்து!