சென்னை:சென்னை அண்ணா நகர் 5ஆவது மெயின் ரோட்டில் ஒரு வீட்டில் பழமைவாய்ந்த சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விரைந்து அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு பழமைவாய்ந்த உட்கார்ந்த நிலையில் உள்ள மாரியம்மன் சிலை மற்றும் நடனமாடும் நடராஜர் சிலை ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து இரு சிலைகள் குறித்து விசாரணை நடத்திய போது, பெற்றோர் காலத்திலிருந்தே சிலைகள் இருப்பதாகவும், சிலைகள் குறித்த ஆவணங்கள் இல்லாததால் இரு சிலைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.