சென்னை:புதுவண்ணாரப்பேட்டையின் வெங்கடேசன் அலி தெருவைச் சேர்ந்தவர் டைலர் சிவாஜி. இவர் தனது மனைவி வனிதா, பத்து வயது மகன் வெற்றிவேல் ஆகியோருடன் வசித்துவந்தார். இவர் தண்டையார்பேட்டை பைப் நிறுவனத்தில் கூலி வேலை செய்துவந்தார். இவர்களது மகன் வெற்றிவேல் ஒரு தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்புப் படித்துவந்தார்.
கடந்த சில மாதங்களாக இவர்கள் கடன் தொல்லையில் இருந்துள்ளார்கள். இந்நிலையில் இன்று (டிசம்பர் 15) காலை வெகு நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த வனிதாவின் தாய் வத்சலா கதவைத் தட்டியுள்ளார்.
கதவு திறக்காததால் பின்னர் வீட்டின் ஜன்னலைத் திறந்து பார்த்தபொழுது கணவன், மனைவி, பேரன் மூன்று பேரும் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இருந்துள்ளனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் இச்சம்பவம் குறித்து புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.