தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாங்காடு அருகே கோர விபத்து அண்ணன், தம்பி உட்பட 3 பேர் உயிரிழப்பு - தம்பி உட்பட மூவர் உயிரிழப்பு

மாங்காடு அருகே வண்டலூரிலிருந்து மீஞ்சூர் செல்லும் சாலையில் தடுப்பு கம்பிகளை உடைத்தபடி கார் ஒன்று பள்ளத்தில் விழுந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 18, 2022, 9:53 AM IST

சென்னை:மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இன்று (அக்.18) அதிகாலை அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று சாலையோர இரும்பு தடுப்புகளில் மோதி, அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த காரில் இருந்த 5 பேரில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் விபத்தில் சிக்கியவர்கள் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு என்பதும் இருவரும் சகோதரர்கள் என்பது தெரியவந்தது.

வேடந்தாங்கலில் இருந்து வாங்கி வந்த பொக்லைன், ஜேசிபி எந்திரங்கள் பழுதடைந்ததால் மெக்கானிக் ஒருவருடன் சென்று வாகனத்தை சரி செய்துவிட்டு காரில் 5 பேரும் திரும்பியபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர இரும்பு தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துள்ளானது. இந்த விபத்தில் ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு, சுதாகர் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்த நிலையில் வெங்கடேசன், ராஜவேலு ஆகிய இருவரும் சிகிச்சையிலுள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5.5 லட்சம் மோசடி

ABOUT THE AUTHOR

...view details