தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் நாளை முதல் (ஏப். 4) வாக்குப்பதிவு நாளான செவ்வாய்க்கிழமை (ஏப். 6) வரை மூன்று நாள்கள் மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
எனவே, சென்னையில் உள்ள மதுபானக் கடைகளில் இன்றைய தினம் இருப்பு வைத்துக்கொள்ள கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கமான விற்பனைதான் நடைபெற்றது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மதுப் பாட்டில்களை ஏற்கனவே இருப்பு வைத்த மதுப்பிரியர்கள்
டாஸ்மாக் விடுமுறையைத் தெரிந்துகொண்ட மதுப்பிரியர்கள் மூன்று நாளைக்குத் தேவையான மதுப் பாட்டில்களை வாங்கி, ஏற்கெனவே இருப்பு வைத்துள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மேலும், பெரும்பாலானோர் கடந்த இரண்டு நாளாக பைகள் மூலம் பாட்டில்களை நிரப்பிக்கொண்டு சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இன்றைய தினம் அதிகமான கடைகளில் ஏற்கெனவே சரக்கு விற்றுத் தீர்ந்தது எனவும், பெரும்பாலான கடைகளில் சரக்கு இருப்பும் குறைவாகவே இருந்தது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.