வார இறுதி நாட்கள் மற்றும் சுதந்திர தினம் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் தங்கி வேலை செய்பவர்கள், மாணவர்கள் என பல பேர் தனது சொந்த ஊருக்கு சென்று இருந்தனர்.
இந்த நிலையில் தென் மாவட்டங்களுக்கு சென்ற பொதுமக்கள் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னைக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் புது பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் தனியார் பேருந்துகள், கார்கள் அதிக அளவில் வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
போக்குவரத்து நெரிசலில் திணறிய ஜிஎஸ்டி சாலை போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் ஏராளமான போக்குவரத்து காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் தென் மாவட்டங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் சென்னைக்கு வர இருப்பதால், போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் எண்ணிக்கையில் போக்குவரத்து காவல்துறையினர் பணியில் ஈடுபட வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:சுதந்திர தின விழாவில் பள்ளிக்கு கல்வி சீர் வழங்கிய கிராம மக்கள்...