சென்னை:தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையின் அமைச்சராக உள்ள பெரியகருப்பன்மீது, கடந்த அதிமுக ஆட்சியில் மூன்று வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
கடந்த 2017ஆம் ஆண்டு நீட் தேர்வை எதிர்த்து அனுமதி இன்றி போராட்டம் நடத்தியது, சட்டப்பேரவைத்தேர்தலின்போது அதிக வாகனங்களைப்பயன்படுத்தியது, அனுமதி இல்லாமல் கட்சி அலுவலகத்தை திறந்தது என மூன்று வழக்குகள் காவல் துறை மூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி பெரியகருப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீட் போராட்டம் என்பது ஒரு ஜனநாயக ரீதியிலான போராட்டம் என்றும்; இதில் அனைத்து கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், கடந்த அதிமுக ஆட்சியில் உள்நோக்கத்தோடு வழக்குத் தொடரப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.