தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பிறந்தநாள் கேக்: பட்டா கத்தியால் வெட்டிய ரவுடி உள்பட 3 பேர் கைது! - பட்டாக் கத்தியால் கேக் சென்னை

சென்னை: பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கேக்கை பட்டா கத்தியால் வெட்டிய ரவுடி உள்பட மூன்று பேரை காவலர்கள் கைது செய்தனர்.

பட்டாக் கத்தியால் கேக் வெட்டும் காணொலி
பட்டாக் கத்தியால் கேக் வெட்டும் காணொலி

By

Published : Oct 16, 2020, 2:53 PM IST

சென்னை சிந்தாதிரிப்பேட்டை காக்ஸ் காலனி அருகே ஒரு கும்பல் பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியது.

அதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை கிளப்பியது. அதனால் அப்பகுதி காவலர்கள் விசாரணை நடத்திவந்தனர்.

இந்த நிலையில் அதுதொடர்பாக சிந்தாரிப்பேட்டை என்.என் காலனியைச் சேர்ந்த ரவுடி சஞ்சய், அவரது நண்பர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

பட்டா கத்தியால் கேக் வெட்டும் காணொலி

இது குறித்து காவலர்கள், "அக்.10ஆம் தேதி ரவுடி சஞ்சய் உள்பட நான்கு பேர் பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடினர். அதன் காரணமாக சஞ்சய் கணேஷ், பாலாஜி ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆகாஷ்(19) என்பவரை தேடி வருகிறோம்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள் கைது

ABOUT THE AUTHOR

...view details