தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 15, 2022, 1:43 PM IST

ETV Bharat / city

வங்கியில் போலி நகை வைத்து ரூ.32 லட்சம் மோசடி: மூவர் கைது

கே.கே.நகர் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் போலி நகைகளை வைத்து ரூ.32 லட்சம் பணம் பெற்ற மூவரை நான்கு ஆண்டுகளுக்கு பின் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மூவர் கைது
மூவர் கைது

சென்னை: அம்பத்தூர் - அய்யபாக்கம் நெடுஞ்சாலை, கே.கே.நகரில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை அம்பத்தூர், டி.ஜி.அண்ணாநகர் பகுதியைச் சார்ந்த தமீம் அன்சாரி (33) என்பவர், தனது 3 நண்பர்களுடன் வந்து சிறுக சிறுக சுமார் 210 சவரன் வரை தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.32 லட்சம் வரை பணம் பெற்று உள்ளார்.

இதற்கிடையில் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வங்கியில் உள்ள நகைகளை அதிகாரிகள் தணிக்கை செய்துள்ளனர். அப்போது தமீம் அன்சாரி மற்றும் அவரது நண்பர்கள் அடமானம் வைத்த நகைகள் அனைத்தும் தங்க மூலம் பூசிய போலி நகைகள் என்பது தெரியவந்தது.

மூவர் கைது

இதனையடுத்து 2019ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி வங்கி மேலாளர் சீனிவாசன் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தமீம் அன்சாரி உள்ளிட்ட 4 பேரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். ஆனால் அவர்கள் காவல் துறையினரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தனர்.

இந்நிலையில் அம்பத்தூர் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையில் காவல் துறையினர் தலைமறைவாக இருந்த தமீம் அன்சாரி மற்றும் அவரது நண்பர்களான பாடி, கலைவாணர் நகரைச் சேர்ந்த முகம்மது கபீர் (39), முகம்மது சித்திக் (34) ஆகிய மூவரை நான்கு ஆண்டுகளுக்கு பின் கைது செய்துள்ளனர். கைது செய்யபட்ட மூவரையும் காவல் துறையினர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் ஒரு இளைஞரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:அதிமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

ABOUT THE AUTHOR

...view details