தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாநகராட்சியில் புகார் கொடுத்தா மிரட்டுறாங்க! பெண் வேதனை - chennai corporation

சென்னை மாநகராட்சியில் புகார் கொடுத்தால் வீட்டிற்கு ஆட்கள் வந்து மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

By

Published : May 24, 2022, 7:10 AM IST

இதுதொடர்பாக அப்பெண் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், எங்கள் பகுதியில் இயங்கி வரும் பள்ளியில் இருந்து வெளியேறும் கழிவு அங்கு உள்ள மாநகராட்சி மழைநீர் வடிகாலில் சட்ட விரோதமாக கலக்கப்படுகிறது , இதனால் துர்நாற்றம் வீசுவதால் மாநகராட்சி இணையதளத்தில் புகார் தெரிவித்தாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் புகார் தெரிவிக்கக் கூடாது என 10க்கும் மேற்பட்டோர் நீல வண்ண ஆடைகள் அணிந்து வீட்டுக்கு வந்து மிரட்டுகின்றனர் எனவும் இதற்கு முன்பு கொசுக்கள் அதிகமாக உள்ளதாக புகார் தெரிவித்ததற்கு அப்போதும் இதே போன்று ஆட்கள் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். தற்போது மீண்டும் மிரட்டல் விடுத்து வீட்டை புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்றுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இது வேதனைக்குரிய செயலாகும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணை மாநகராட்சி தொடர்பு கொண்டு மிரட்டல் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

இதையும் படிங்க: விஷ குளிர்பானத்தை கொடுத்து மாணவி கொலை? - பொதுமக்கள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details