தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்ட தொடக்க விழா... பங்கேற்க உள்ள டெல்லி முதலமைச்சர்.. - Delhi Chief Minister Arvind Kejriwal in Tamil Nadu

அரசுப்பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா வரும் செப்.5ஆம் தேதி நடக்க உள்ளதாகவும்; அதில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 29, 2022, 8:26 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 நிதியுதவி அளிக்கும் திட்டத்தின் தொடக்க விழா வரும் செப்.5 ஆம் தேதி நடக்க உள்ளதாகவும்; அதில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ், அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டம், பட்டயம், தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1000 அவர்கள் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, ரூ.698 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

முன்னதாக மாணவிகள் ஏற்கெனவே, பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் கூட இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் உள்ளிட்ட வழிமுறைகள் வெளியிடப்பட்டன. இத்திட்டத்தின்கீழ், 93 ஆயிரம் மாணவிகள் நடப்புக்கல்வி ஆண்டில் பலன் பெற இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கான தொடக்க விழா வரும் செப்.5ஆம் தேதி வட சென்னையில் உள்ள பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற இருப்பதாகவும், அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். குறிப்பாக, இந்நிகழ்ச்சியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுக அரசு செயல்படுத்தும் திட்டங்களில், மிக முக்கியமான திட்டமாகப் பார்க்கப்படும் இத்திட்டம் தேசிய அளவில் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டம், பட்டயம், தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1000 அவர்கள் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உயர் கல்வி பயில அரசுப்பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details