சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதைக் கருத்தில் கொண்டு நாளை முதல் 30ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று நள்ளிரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஊரடங்கு அமலுக்குவருகிறது. இதன் காரணமாக சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு மக்கள் அதிக அளவில் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். கார், வேன், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மூலம் பொதுமக்கள் செல்வதால், சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.