இது நாடாளுமன்றத்திலும் நிகழ்கிறது. ஏனென்றால் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தி தெரியாது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது.
'மோடி அரசின் மொழிவெறி போக்கை விசிக மிக வன்மையாகக் கண்டிக்கிறது'- தொல்.திருமாவளவன் - Thol. Thirumavalavan tweet
சென்னை: மோடி அரசின் மொழிவெறி போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது என அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Thol. Thirumavalavan
இது குறித்து அவரது ட்விட்டரில், "மத்திய அரசு துறைகளில் வெளிப்படையாகவே இந்தி திணிக்கப்பட்டுவருகிறது. இந்தியே தெரியாத அலுவலர்கள், பணியாளர்களுக்கு சுற்றிக்கைகள், அறிவிப்புகள் ஆங்கிலத்தில் அல்லாமல் இந்தி மொழியிலேயே அனுப்பப்படுகின்றன.
சட்டத்திற்கு புறம்பானது எனவே மோடி அரசின் மதவெறி போக்கை, ஆதிக்கவெறி போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:”தமிழ்நாட்டு வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே!” - திருமாவளவன் எம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம்