தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட எந்த பண்டிகையாக இருந்தாலும் சென்னை தியாகராய நகர், ரங்கநாதன் தெருவில் மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். புத்தாடை, அணிகலன், இனிப்பு உள்ளிட்டவை வாங்குவதற்கு தியாகராய நகரில் மக்கள் அலைமோதுவர். ஆனால், தீபாவளி பண்டிகை நாளை கொண்டாட உள்ள நிலையில், தியாகராய நகர், ரங்கநாதன் தெரு உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் கரோனா பரவல் காரணமாக மந்தமாக காணப்படுகிறது.
தீபாவளி திருநாளில் களையிழந்து காணப்படும் தியாகராய நகர்...! - தீபாவளி பண்டிகை
சென்னை: தீபாவளி பண்டிகை நாளை (நவம்பர் 14) கொண்டாட இருக்கும் நிலையில், மக்கள் கூட்டம் இல்லாமல் சென்னை தியாகராய நகர் களையிழந்து காணப்படுகிறது.
thiyagaraya-nagar
கடந்த வாரங்களில் இருந்த மக்கள் கூட்டம் கூட, தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான இன்று (நவம்பர் 13) இல்லை எனவும், ஜவுளி கடை, நகைக் கடைகளில் வாடிக்கையாளர்கள் இல்லாமல் ரங்கநாதன் சாலை வெறிச்சோடி காணப்படுகிறது எனவும் வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.