தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டார். அப்போது, தமிழ்நாடு அரசு மேற்கொண்ட ரேபிட் பரிசோதனை கருவிகள் கொள்முதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார்.
எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டு குறித்து பேசுகையில், தற்போதைய சூழ்நிலை உலகளவில் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது இது அரசியல் செய்வதற்கான காலம் அல்ல. எதிர்க்கட்சித் தலைவர் ரேபிட் கிட் விவகாரத்தில் அரசியல் செய்கிறார். ஆந்திராவில் தமிழ்நாட்டை விட அதிக விலை கொடுத்து வாங்கி உள்ளனர். அங்குள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஆந்திர முதல்வரை பாராட்டுகிறார். ஆனால் இந்தியாவில் முதன்முதலாக ரேபிட் கிட் ஆர்டர் செய்து பரிசோதனையை தொடங்கியது தமிழ்நாடுதான்.