திருவாரூர்: தற்போது சம்பா சாகுபடிக்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 60 விழுக்காடு விவசாயிகள் ஏக்கருக்கு 15 ஆயிரம் முதல் 20,000 ஆயிரம் வரை செலவு செய்து நேரடி நெல் விதைப்பும், இயந்திரங்களைக் கொண்டு ஒற்றை பட்ட நடவு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குறுவை சாகுபடியின்போது இயற்கை பேரழிவுகளால் நெற்பயிர்கள் முழுவதும் சேதமடைந்தும், அதற்கான இழப்பீட்டை தமிழ்நாடு அரசு வழங்கவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை தற்போது செலவினத்தை குறைப்பதற்காக நேரடி விதைப்பு முறையிலும், எந்திரங்களை கொண்டு ஒற்றைபட்ட நடவு முறையிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தாண்டு திருவாரூர் மாவட்டம் முழுவதும் 60 விழுக்காடு விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு, ஒற்றை பட்ட நடவு முறை செய்து வரும் நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு ஒற்றைபட்ட நடவு முறைக்கு தமிழ்நாடு அரசு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:ஜெயலலிதா சமாதியில் கண்ணீர் துளிகளுடன் சசிகலா மரியாதை