தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

Thiruvalluvar Thirunal: திருவள்ளுவர் திருநாள் - திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை

Thiruvalluvar Thirunal: திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை
திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை

By

Published : Jan 15, 2022, 1:15 PM IST

Thiruvalluvar Thirunal:உலகப்பொதுமறை, பொய்யாமொழி, தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் அழைக்கப்படும் உலகம் போற்றும் திருக்குறள் நூலை இயற்றிய அய்யன் திருவள்ளுவரைப் பெருமைப்படுத்தும் வகையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 1970-ஆம் ஆண்டு முதல் தைத்திங்கள் இரண்டாம் நாள் "திருவள்ளுவர் திருநாள்" எனவும், அதனை விடுமுறை நாளாகவும் அறிவித்து அரசாணை வெளியிட்டார்.

தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு தைத் திங்கள் இரண்டாம் நாளான அய்யன் திருவள்ளுவர் திருநாளன்று மாலை அணிவித்தும், மலர் தூவியும் சிறப்பு செய்யப்பட்டு வருகிறது.

திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை

அய்யன் திருவள்ளுவருக்கான நினைவகமாக 1976-ஆம் ஆண்டு சென்னையில் வள்ளுவர் கோட்டம் கருணாநிதியால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.

மேலும், 2000-ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் 133 அடி உயர பிரம்மாண்ட திருவள்ளுவர் சிலையை நிறுவி, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கருணாநிதி திறந்து வைத்தார்.

தீராக்காதல் திருக்குறள்

திருக்குறளின் சிறப்பினை மாணவச் செல்வங்கள் அறிந்து கொள்ளும் வகையில், 1330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்யும் மாணவர்களைப் பாராட்டி குறள் பரிசுத் தொகை தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது ரூ.10,000/- குறள் பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.

திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை

இத்தகைய சிறப்புமிக்க திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு இன்று (15.1.2022) தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

"தீராக்காதல் திருக்குறள்" திட்டத்தின் கீழ் நடைபெற்ற ‘குறளோவியம்’ பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ஒவியப் போட்டி அதனைத் தொடர்ந்து, வான்புகழ் வள்ளுவன் இயற்றிய, முக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய, உலகப் பொதுமறையாம் திருக்குறள், இன்றைய தலைமுறையினரைச் சென்றடையும் வகையில் "தீராக்காதல் திருக்குறள்" என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் நிதிஉதவியோடு, தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை

அவற்றில் முதலாவதாக, ‘குறளோவியம்’ என்ற தலைப்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, குறட்பாக்களின் செம்மாந்த கருத்துக்களை அடிப்படையாக கொண்டு மாநில அளவில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.

இப்போட்டியில் சிறந்த 365 ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தினசரி மேசை நாட்காட்டியாக அச்சிடப்பட்டும், அழகுற வரையப்பட்ட சிறந்த ஓவியங்களைத் தொகுத்து காலப்பேழை புத்தகமாகவும், நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2053, தைத்திங்கள் 2-ஆம் நாளான திருவள்ளுவர் தினமான இன்று தமிழ்நாடு முதலமைச்சர், வள்ளுவர் கோட்டத்தில் வைத்து வெளியிட்டார்.

இதையும் படிங்க:முகக்கவசம் அணிவது தொடர்பான விவகாரம் - காவல்துறை மீது சட்டக்கல்லூரி மாணவர் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details