சென்னை பனையூர் கடற்கரை சாலையில் வசித்து வருபவர் ஜெசிகா (41). இம்மாதம் 17ஆம் தேதி இரவு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் இவரது வீட்டில் புகுந்து ஐந்து லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருள்களை திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இவர் பனையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். அப்போது அந்த நபர்கள் ஏற்கனவே கடந்த மாதம் மருத்துவர் ஒருவரின் வீட்டில் திருடியவர்கள் என்பது தெரியவந்தது.
சிசிடிவி காட்சிகளில் சிக்கிய திருடர்கள் தொடர்ந்து காவல் துறையினர், இவர்கள் கொள்ளையடித்து விட்டு ஆட்டோவில் செல்வது போன்ற காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தபோது ஆட்டோ திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஒரு லாட்ஜிற்கு சென்றுள்ளது. பின்பு காவல் துறையினர் அங்கு மேற்கொண்ட ஆய்வில், திருடர்கள் அவர்களின் சொந்த ஊரான திருநெல்வேலிக்குச் சென்றிருப்பது தெரியவந்தது.
திருடர்கள் உலகநாதன்(19), நல்லசிவம் (24) இதனையடுத்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு விரைந்த தனிப்படையினர் தென்காசியைச் சேர்ந்த உலகநாதன் (19), நல்லசிவம் (24) ஆகியோரைக் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களிடமிருந்து சுமார் மூன்று லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: கரோனா அச்சம் : தேனி நீதிமன்றங்கள் மூடல்