தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மேகதாது அணை கட்டினால் தமிழ்நாடு பாதிப்புக்குள்ளாகும் - திருமாவளவன் - etvbharat

மேகதாதுவில் அணை கட்டினால் எதிர்காலத்தில் தமிழ்நாடு கடுமையான பாதிப்புக்குள்ளாகும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இன்று (ஜூலை 16) செய்தியாளர்களிடம் கூறினார்.

மேகதாது அணை கட்டினால் எதிர்காலத்தில் தமிழ்நாடு பாதிப்புக்குள்ளாகும்
மேகதாது அணை கட்டினால் எதிர்காலத்தில் தமிழ்நாடு பாதிப்புக்குள்ளாகும்

By

Published : Jul 16, 2021, 10:09 AM IST

Updated : Jul 16, 2021, 10:28 AM IST

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி பிரமுகர்களுடன் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் டெல்லி சென்றுள்ளார்.

முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூலை 16) செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "கர்நாடகாவில் மேகதாது அணையை கட்டுவதற்கான முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டுள்ளது.

இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழ்நாடு சட்டப்பேரவை கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் இந்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை நேரில் சந்தித்து முறையிட உள்ளோம்.

சென்னை விமான நிலையத்தில் திருமாவளவன் பேட்டி

தமிழ்நாட்டிலிருந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இந்தக் குழு டெல்லிக்கு நேற்று (ஜூலை 15) பயணமாகியிருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நானும் செல்ல இருக்கிறேன்.

மோடி தமிழ்நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க மாட்டார் என்று நம்புகிறோம். அணை கட்டினால் எதிர்காலத்தில் தமிழ்நாடு கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும். எனவே கர்நாடக மாநில அரசின் தமிழ்நாட்டிற்கு எதிரான முயற்சியை தடுத்த நிறுத்த வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: ''பாஜக இரட்டை வேடம் போடவில்லை' - அண்ணாமலை'

Last Updated : Jul 16, 2021, 10:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details