இன்று மெரினாவிலுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் விசிக தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்புத் தகுதியை மத்திய அரசு திரும்பப்பெற்றது ஜனநாயகப் படுகொலை. 70 ஆண்டுகளுக்குப் பின்பு தங்கள் நாடாகக் கருதும் நிலையில் இவ்வாறு செய்திருப்பது ஒரு பாசிச நடவடிக்கை" என்று கடுமையாகத் தாக்கிப்பேசினார்
காஷ்மீரில் கார்ப்பரேட்டுகளுக்கு கதவு திறந்துவிடப்பட்டுள்ளது: திருமாவளவன் - vck
சென்னை: காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்புத் தகுதியை நீக்கியதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அந்த மாநிலத்தின் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
திருமாவளவன்
மேலும் அவர் கூறுகையில், "அடுத்ததாக பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பல விஷயங்களை பாஜக கொண்டுவரவுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டபோது என்னை பேச அனுமதிக்கவில்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்கு காஷ்மீரில் நிலங்கள் வாங்க வாசல் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் போல அங்கும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்கள் வர வாய்ப்புள்ளது" என்று குற்றஞ்சாட்டினார்.