திருப்பதியில் நாளை மறுநாள் பிரம்மோற்சவம் தொடங்கவுள்ள நிலையில், சென்னையில் பல்வேறு பகுதியிலிருந்து திருக்குடைகள் எடுத்துச் செல்லப்பட்டன. அதன் ஒருபகுதியாக, சென்னையில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோயிலிலிருந்து 11 திருக்குடைகள் ஏழுமலையான் திருப்பதிக்கு இன்று மாலை எடுத்துச் செல்லப்பட்டது.
சென்னையிலிருந்து திருப்பதிக்கு 11 திருக்குடைகளை ஏந்திச் செல்லும் பக்தர்கள்! - திருப்பதி பிரம்மோற்சவம்
சென்னை: திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சென்னகேசவ பெருமாள் கோயிலிலிருந்து 11 திருக்குடைகளை ஏழுமலையான் திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் கொண்டு செல்கின்றனர்.

Thirukudai for Tirupati brammotsavam
அந்த நிகழ்ச்சியின்போது ஏராளமான பக்தர்கள் கோவிந்தா என கோஷம் போட்டு பரவசத்தால் திருக்குடைகளை ஏந்திக் கொண்டு சென்றனர்.
திருக்குடைகளை ஏந்திச் செல்லும் பக்தர்கள்
இந்த திருக்குடைகள் நாளை திருப்பதியை சென்றடையும் என பக்தர்கள் தெரிவித்தனர். அனைத்து திருக்குடைகளும் கருடோத்சவம் அன்று திருமலையில் உலா வரும் எனவும் அவர்கள் கூறினார்கள்.