தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் நடத்தப்படும் - தமிழ்நாடு அரசு - Chennai High Court

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோயிலின் பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் நடத்தப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

By

Published : Oct 6, 2021, 10:55 PM IST

சென்னை: வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் தாக்கல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா நடத்தப்படும் நிலையில், கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 2020, 2021ஆம் ஆண்டுகளில் சவுரிராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்தபடவில்லை. கோயில் மத விவகாரங்களில் தலையிட அரசுக்கு தடை விதிக்க வேண்டும். ஆகம விதிகளில் கூறியுள்ள படி எதிர்காலத்தில் உற்சவங்களை நடத்த வைணவ சமயத்தை சேர்ந்த ஜீயர்கள், ஸ்தலத்தார்கள் உள்ளிட்டோர் அடங்கிய உற்சவ குழுவை அமைத்து பிரமோற்சவத்தை நடத்த உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருதரப்பு வாதம்

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தரப்பில், சவுரிராஜ பெருமாள் கோயிலின் பிரமோற்சவம் நவம்பர் 10ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. பிரமோற்சவ விழாவிற்காக பல சபாக்கள் நன்கொடை வசூலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர் தரப்பில், வெளியூரிலிருந்து விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு உணவளிப்பதற்காகவே நன்கொடை வசூலிக்கப்படுகிறது, அதில் சட்டவிரோத செயல்பாடை கண்டறிந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவிக்கபட்டது.

நீதிமன்ற உத்தரவு

அப்போது நீதிபதிகள், சட்டவிரோதமாக நன்கொடை வசூலிக்கப்படுவதாக கண்டறியப்பட்டால் நீதிமன்ற தலையிட நேரிடும் என கூறி, வழக்கு விசாரணையை அக்டோபர் கடைசி வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: மாணவர்களிடையே கரோனா... பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...

ABOUT THE AUTHOR

...view details