சென்னை:ஆல்பர்ட் திரையரங்கில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் இன்று திரைப்படத்தைக் காண வந்த ரசிகர்கள், அங்கு புரோஜக்டரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் படம் திரையிடப்படாததால் ரகளையில் ஈடுபட்டனர். அந்த ரகளையில் திரையரங்கின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பழம்பெரும் திரையங்குகளுள் ஒன்றான ஆல்பர்ட் திரையங்கில், நடிகர் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. ஆன்லைன் வழியாகவும், நேரடியாகவும் நடந்த டிக்கெட் விற்பனையின் முடிவாக இன்று (ஆக.27) ஏராளமான ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர்.
இந்நிலையில், புரொஜக்டரில் தொழிற்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக 12 மணி காட்சி ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் 12 மணி காட்சி ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டதனால், சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த ரசிகர்கள் அதிருப்தியில் திரையரங்க நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.