தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 8, 2022, 3:13 PM IST

Updated : Mar 8, 2022, 7:05 PM IST

ETV Bharat / city

மாவட்ட வாரியாக கோயில் நிலங்கள் எவ்வளவு? - தகவல் தெரிவித்த அறநிலையத்துறை

திருக்கோயில்களுக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கும் பணியின் முதற்கட்டமாக ஏறக்குறைய 31,670 ஏக்கர் நிலங்கள், நில அளவையாளர்கள் மூலம் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்து சமய அறநிலைத்துறை
இந்து சமய அறநிலைத்துறை

சென்னை: தமிழ்நாட்டில் திருக்கோயில்களில் ஆய்வு மேற்கொண்டு திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதன் ஒருபகுதியாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள, திருக்கோயில் நிலங்கள் நவீன ரோவர் உபகரணங்களைப் பயன்படுத்தி அளவீடு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு, மண்டல வாரியாக நடைபெற்று வருகின்றன.

  • தூத்துக்குடி மாவட்டத்தில் 3660.54 ஏக்கரும்,
  • திருச்சி மாவட்டத்தில் 3151.14 ஏக்கரும்,
  • திருப்பூர் மாவட்டத்தில் 3043.77 ஏக்கரும்,
  • திருநெல்வேலி மாவட்டத்தில் 2705.79 ஏக்கரும்,
  • சிவகங்கை மாவட்டத்தில் 1897.51 ஏக்கரும் உட்பட பல்வேறு மாவட்டங்களில் மீட்கப்பட்டுள்ளன.

கம்பி வேலிகள்

இதுவரையில், 31670.64 ஏக்கர் நிலங்கள் அளக்கப்பட்டுள்ளன. அளவீடு செய்யப்பட்ட நிலங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் 106 கற்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 167 கற்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 98 கற்களும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 400 கற்களும் உட்பட பல்வேறு மாவட்டத்தில் Hindu Religious and Charitable Endowments Department - (HRCE) என்ற பெயர் பொறிக்கப்பட்ட எல்லைக்கல் ஊன்றி, கம்பிவேலி அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திருக்கோயிலின் நிலங்களில் எல்லைக்கல் ஊன்றும் பணி

மேலும், மீதமுள்ள நிலங்களை, 150 நில அளவையர்கள் மூலம் 56 ரோவர் கருவிகளைக் கொண்டு அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க வட்டாட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் திருக்கோயில் நிலங்களைக் கண்டறிவதுடன் ஆக்கிரமிப்புதாரர்களிடமிருந்து நிலங்களைப் பாதுகாத்து திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்ட ஏதுவாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தேர்தல் கருத்துக்கணிப்புகள் 2022: குஷியில் பாஜக... கவலையில் காங்கிரஸ்...

Last Updated : Mar 8, 2022, 7:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details