ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்த திரைப்பட பின்னணிப் பாடகி எஸ். ஜானகி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 17 மொழிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். அவரது உடல்நலம் தொடர்பாக அவ்வப்போது வதந்திகள் பரப்பப்பட்டுவருகின்றன. அந்த வகையில், இன்றும் அவர் காலமானதாக சமூக வலைதளங்களில் தவறான செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
'6ஆவது முறையாக என்னைச் சாகடித்து விட்டார்கள்' - பின்னணிப் பாடகி எஸ். ஜானகி வேதனை - பின்னணி பாடகி எஸ். ஜானகி வேதனை
சென்னை: ஆறாவது முறையாக என்னைச் சாகடித்து விட்டார்கள் என்று பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி வேதனை தெரிவித்துள்ளார்.
இதையறிந்த பாடகி எஸ். ஜானகி, ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நான் நன்றாக இருக்கிறேன். அனைவரும் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரிக்கிறார்கள். தவறான தகவலை எதற்காகப் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. தமாஷ் என்ற பெயரில் வேண்டுமென்றே செய்கிறார்களா? தற்போதுவரை, நான் காலமானதாக ஆறு முறை கூறியிருக்கிறார்கள். ஒருமுறை வாட்ஸ்அப்பில் விளக்கம் அளித்திருக்கிறேன்.
இதுபோன்ற செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம். அதிகமான இதய நோயாளிகள் இருப்பார்கள். இந்தச் செய்தியைக் கேட்டால் அவர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படும். அவர்களைக் கொன்று விடாதீர்கள் என்று கூறியிருந்தேன். மீண்டும் இதேபோன்று ஆறாவது முறையாக நான் காலமானதாக செய்தி பரப்புகிறார்கள், நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்" என்று வேதனையுடன் பேசியுள்ளார்.