வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்! - சென்னை வானிலை மையம்
சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
status
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனி மூட்டத்துடனும் காணப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜனவரி 29ஆம் தேதி பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்