சென்னை: சென்னையில் குளிர் அலை வீசியதாகவும், இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததாகவும் பொய்யான செய்தி திடீரென பரவியது. இதனையடுத்து பலரும் இந்த வதந்தியை நம்பி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இதனையடுத்து இது குறித்து வானிலை ஆய்வு மையம் அதன் ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளது.
தமிழநாடு வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘சூரியனைச் சுற்றியுள்ள பூமியின் நகர்வு தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கடும் குளிர் அலை எச்சரிக்கை விடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. சென்னை ஐ.எம்.டி.யால் அப்படி எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்பது இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது எனக் குறிப்பிட்டிருந்தது.