தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசு ஊழியரின் வங்கி கணக்கிலிருந்து பணம் திருட்டு! - சிம் ஆக்டிவேஷன்

சிம் ஆக்டிவேஷன் செய்வதாகக் கூறி நூதன முறையில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் வங்கி கணக்கிலிருந்த ரூ.85 ஆயிரம் பணத்தை திருடிய நபர் மீது அளித்த புகாரை அடுத்து சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு ஊழியரின் வங்கி கணக்கிலிருந்து பணம் திருட்டு
அரசு ஊழியரின் வங்கி கணக்கிலிருந்து பணம் திருட்டு

By

Published : Jul 13, 2021, 10:50 AM IST

சென்னை: அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனி வாட்டர் டேங்க் சாலையை சேர்ந்தவர் பாலன் (73). ஓய்வுபெற்ற அரசு ஊழியரான இவர் ஜூலை 10ஆம் தேதி சிம் கார்டு ஒன்றை வாங்கியுள்ளார்.

அன்றைய தினம் மாலை 3.15 மணியளவில் பாலனின் கைப்பேசி எண்ணை தொடர்பு கொண்ட நபர் ஒருவர், 'உங்களது சிம் கார்டை ஆக்டிவேட் செய்யவேண்டுமென்றால் தாங்கள் அனுப்பக்கூடிய லிங்கிற்குள் சென்று ரூ.10 செலுத்த வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

இதனை நம்பிய பாலன் அந்த நபர் கூறியதை செய்துள்ளார். உடனே பாலனின் எஸ்பிஐ வங்கி கணக்கிலிருந்து ரூ. 86 ஆயிரம்,500 பணத்தை எடுத்ததாக குறுந்தகவல் வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாலன் உடனடியாக அரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'விசாரணையில் முன்னேற்றம் இல்லை: ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவனின் போலீஸ் காவல் நாளையுடன் நிறைவு!'

ABOUT THE AUTHOR

...view details