தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சட்டப்பேரவை உறுப்பினர்கள் குடியிருப்பில் உள்ள திமுக எம்எல்ஏவின் அறையில் திருட்டு! - திமுக எம்எல்ஏவின் அறையில் திருட்டு

சென்னை: சட்டப்பேரவை உறுப்பினர்கள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள தனது அறையில் திருடு போயுள்ளதாக பூண்டி கலைவாணன் புகார் அளித்துள்ளார்.

பூண்டி கலைவாணன்
பூண்டி கலைவாணன்

By

Published : Apr 16, 2021, 5:17 PM IST

சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் குடியிருப்பு வளாகத்தில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையின் பூட்டு உடைக்கப்பட்டு, அறையிலிருந்த எல்இடி டிவி, மிக்ஸி, சிலிண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் திருடப்பட்டுள்ளதாக திமுக எம்எல்ஏ பூண்டி கலைவாணன் புகார் அளித்துள்ளார்.

திருவாரூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினரான பூண்டி கலைவாணனிடம் தனிச் செயலாளராக உள்ள ஸ்ரீனிவாசன் (45) என்பவர், முன்னதாக எம்எல்ஏ பூண்டி கலைவாணனுக்கு ஒதுக்கப்பட்ட D பிளாக் 4C அறையில் தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், இவர் கடந்த மாதம் 12ஆம் தேதி தனது அறையைப் பூட்டிவிட்டு தேர்தல் பணிக்காக திருவாரூருக்குச் சென்றுவிட்டு கடந்த 9ஆம் தேதி மீண்டும் திரும்பியுள்ளார். அப்போது அவர் வந்து பார்த்தபோது அறையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த எல்இடி டிவி, மிக்ஸி, சிலிண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் திருடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து, விடுதியை நிர்வாகம் செய்யும் பராமரிப்பாளர் குழந்தைசாமியிடம் ஸ்ரீனிவாசன் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், விடுதி நிர்வாகி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். ஒரு மாத காலமாக அறை பூட்டி இருந்ததால் எப்போது திருட்டு சம்பவம் நடைபெற்றது என்பதைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் இருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கும் விடுதி வளாகத்திற்கு 24 மணி நேர காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நடிகர் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை

ABOUT THE AUTHOR

...view details