தாம்பரம்:முடிச்சூரில் வைகறை அம்மன் ஆலயம் உள்ளது. வழக்கம் போல் பூஜை முடித்து இரவு 8 மணி அளவில் கோயிலை பூட்டிவிட்டு வீட்டீற்கு சென்ற நிர்வாகி ஜெமின் என்பவர் இன்று காலை வழக்கம் போல் கோயிலை திறப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியலை மர்ம நபர்கள் அடியோடு பெயர்த்து எடுத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காவல் நிலையத்திற்கு கோயில் நிர்வாகிகள் தகவல் அளித்தனர்.