சென்னை பூந்தமல்லி சந்நிதி தெருவைச் சேர்ந்த ஞானபிரகாசம்(79) என்பவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்றார். பல ஆண்டுகளாக, அண்ணா நகர் சாந்தி காலனியில் வசித்து வந்த ஞானபிரகாசம், கடந்த 4 மாதத்திற்கு முன்பு பூந்தமல்லியில் குடியேறினார்.
ஓய்வுபெற்ற நீதிபதி வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பணம், நகை கொள்ளை
ஓய்வுபெற்ற நீதிபதி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் பணம் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
பூந்தமல்லிக்குச் சென்றாலும், அண்ணா நகரில் உள்ள வீட்டை ஞானபிரகாசம் அடிக்கடி வந்து பார்த்து விட்டுச் செல்வார். அந்த வகையில், ஞானபிரகாசம் அண்ணாநகர் வீட்டிற்குச் சென்றபோது, வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டினுள் சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து ஞானபிரகாசம் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்குச் சென்று, விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.